Posts

Showing posts from 2021

முகாரி ராகம்

Image
BASED ON A TRUE STORY சரோவின் முகத்தில் பயத்தின் ரேகை படிந்து இருந்தது. கண்ணீர் கன்னங்களில் வடிந்து உலர்ந்து இருந்தது. பேய் அறைந்தாற்போல் நாள் முழுதும் அமர்ந்திருந்தாள் வசந்தி. அவளுக்கு அன்று முழுவதும் எந்த வேலையும் ஓடவில்லை. எதையோ அடிக்கடி எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடம்பு நடுங்கிக்கொண்டு இருந்தது. காய்ச்சல் பற்றி எரிந்தது. காட்டிக்கொள்ளவில்லை. விடியக் காலை வேலைக்கு வந்தவள் பின்னேரம் வேலைநேரம் முடியும் வரைக்கும் இரண்டு மூன்று தடவை தேம்பி தேம்பி அழுதிருப்பாள். யார் கேட்டும் எதுவும் சொல்லவில்லை. பின்னேரம் வேலை முடிந்து சைக்கிளை எடுக்கையில் அவளுடைய கண்கள் கட்டுப்பாட்டை இழந்து கண்ணீரை சொரிந்து கொண்டு இருந்தது. அவளால் அதை நகர்த்த முடியவில்லை. அத்தனை இயலாமை. சோர்வு தோய்ந்த குரலில் விம்மி அழத் துவங்கினாள். விம்மல் கொஞ்சம் கொஞ்சமாய் கதறலாக மாறியது. சரோவின் தோள்களை ஒரு கை தொட்டது. அவளுடைய இதயத்துடிப்பு ஒருகணம் நின்று மீண்டும் ஒலித்தது. பயந்துவிட்டாள். மெல்லிய குரலொன்று “சரோ” என்று கூப்பிட்டது. அவள் முகம் சற்று சமாதானம் கொண்டு திரும்பி அந்த கைக்கு சொந்தகாரியை ஏறிட்டது. அவளின் கண்...