அவளதிகாரம் | வேணி

அந்த ஆட்டம் சுவாரசியமாக போய்க்கொண்டு இருந்தது. அவனுடைய அழைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரே ஒரு ஆட்டம். அமெரிக்காவின் பிரபலமான காமிக் நிறுவனத்தின் உடைமையாக இருந்தது அந்த ஆட்டம். அவனுடன் இருப்பவர்களால் அவனுக்கும் அவற்றில் ஆர்வம் நிறைந்து இருந்தது. அந்த காமிக் நிறுவனத்தின் கதைகளிலும் திரைப்படங்களிலும் அந்த கைபேசி விளையாட்டிலும் அண்மித்த காலங்களில் அதீத ஈடுபாடு உடையவனாகிவிட்டு இருந்தான். அதீத சக்தி வாய்ந்தவர்களை ஒன்றாக சேர்த்து எதிராளியை வெற்றி கொள்ளவேண்டும். விளையாட்டின் சாராம்சம். இரவு நீண்ட நேரம் கடந்தும் அந்த ஆட்டத்தில் மூழ்கிப் போய் இருந்தான். அந்த ஆட்டத்தில் இருக்கும் போதெல்லாம் அவனுடைய மற்ற தளங்களில் இருந்து கிடைக்க பெறும் அறிவித்தல்கள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுவிடும். இதனாலேயே ஆட்டம் முடிந்து நீண்ட நேரம் வரை பல பல சமாளிப்புக்கள், மறந்து விட்ட கதைகள், நாளாந்த சுவர் பதிவுகள் என நிறைய வேலைகள் மிச்சம் இருக்கும். அதற்குள் வீட்டில் இன்னும் சில நூறு பிரச்சினைகள். அதையெல்லாம் சரி செய்து நித்திரைக்கு செல்வதற்கும் அவன் பாடு பெரும் பாடு ஆகிவிடும். என்னதான் வாட்ஸ்ஆப் ...