Posts

முகாரி ராகம்

Image
BASED ON A TRUE STORY சரோவின் முகத்தில் பயத்தின் ரேகை படிந்து இருந்தது. கண்ணீர் கன்னங்களில் வடிந்து உலர்ந்து இருந்தது. பேய் அறைந்தாற்போல் நாள் முழுதும் அமர்ந்திருந்தாள் வசந்தி. அவளுக்கு அன்று முழுவதும் எந்த வேலையும் ஓடவில்லை. எதையோ அடிக்கடி எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடம்பு நடுங்கிக்கொண்டு இருந்தது. காய்ச்சல் பற்றி எரிந்தது. காட்டிக்கொள்ளவில்லை. விடியக் காலை வேலைக்கு வந்தவள் பின்னேரம் வேலைநேரம் முடியும் வரைக்கும் இரண்டு மூன்று தடவை தேம்பி தேம்பி அழுதிருப்பாள். யார் கேட்டும் எதுவும் சொல்லவில்லை. பின்னேரம் வேலை முடிந்து சைக்கிளை எடுக்கையில் அவளுடைய கண்கள் கட்டுப்பாட்டை இழந்து கண்ணீரை சொரிந்து கொண்டு இருந்தது. அவளால் அதை நகர்த்த முடியவில்லை. அத்தனை இயலாமை. சோர்வு தோய்ந்த குரலில் விம்மி அழத் துவங்கினாள். விம்மல் கொஞ்சம் கொஞ்சமாய் கதறலாக மாறியது. சரோவின் தோள்களை ஒரு கை தொட்டது. அவளுடைய இதயத்துடிப்பு ஒருகணம் நின்று மீண்டும் ஒலித்தது. பயந்துவிட்டாள். மெல்லிய குரலொன்று “சரோ” என்று கூப்பிட்டது. அவள் முகம் சற்று சமாதானம் கொண்டு திரும்பி அந்த கைக்கு சொந்தகாரியை ஏறிட்டது. அவளின் கண்...

அப்பா..!

Image
அந்த நாள் விடியல் காணாமல் இருந்து இருக்கலாம். அன்றேல் நான் உறங்காமல் இருந்திருக்கலாம். அவளுடைய கதறல்கள் எங்கோ தொலைதூரத்தில் கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதைப் போல் கேட்டுக்கொண்டு இருந்தது. அந்தச் சத்தம் அருகாமைகளில் கேட்கத் துவங்கும் போது லேசாக முழிப்புத்தட்டியது. ஊரடங்கின் விளைவாக என்னுடைய அதிகாலையில் காலை பதினொன்றிலிருந்து எட்டாக மாறிவிட்டிருந்தது. அதாவது தூக்கமின்மை என்கிற வியாதி என்னுள் பரவத்துவங்கியிருந்தது. சிறிய சத்தமும் இலகுவில் என்னை விழிப்படையச் செய்துவிடும். அவளுடைய சத்தம் சிறிய அளவிலான சத்தம் அல்ல. அவள் ஜீவன் அவளைவிட்டுப் பிரிகின்றது போல ஒரு சத்தம். எதையாவது பரண் மேலே இருந்து எடுக்க எத்தனிக்கையில் அவள் விழுந்து கதறுவது வழமையான ஒன்று. அவள் விழுந்தால் என்னால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவள் கதறல்கள் காதுகளை வந்தடையவும் நித்திரையை துறந்து ஓடிச் சென்றேன். அவள் கீழே விழுந்து இருந்து கதறிக்கொண்டு இருந்தாள். "இப்ப எத எடுக்க ஏறி விழுந்தநீ? - கொஞ்சம் கவனமா இருக்க வேண்டியது தானே!" என்ற படி அவளை தூக்க முயற்சித்தேன். அவளுடைய கவனமெல்லாம் அவள் விழுந்திருந்த இடத்திற்கு அருகே படு...

நீ பார்க்கும் பார்வைகள் 3

Image
அவள் சமாதானம் ஆகியிருந்தாள். அவள் மெல்லிய கரங்கள் அவன் தடித்த இடக்கையைச் சுற்றிப்பிடித்து இருந்தது. வலக்கைப் பெருவிரலால் அவன் கையைச் சுரண்டினாள். அவள் ஸ்பரிசங்களுக்கு அவனுக்கு விளக்கம் வேண்டியிருக்கவில்லை. "சொல்லு குஞ்சம்மா… இப்ப என்ன செய்யோனும் நான்?" அவள் கையைப் பற்றியபடி கேட்டான். "எனக்கு இப்ப வீட்ட போவேண்டாம்." "அப்ப..." "ஐஸ்க்ரீம்!" என்று சொல்லி அவனை குழைந்தபடி பார்த்தாள். "சரி சரி ஐஸ்க்ரீம் ஓகே… ஆனா இப்பிடிப் பாக்காத என்னை ப்ளீஸ்!" "சரி" என்று சொன்னவள் இன்னும் அதிக வாஞ்சையோடு அவனைப் பார்த்தாள். "குஞ்சம்மா, இப்பிடியே பார்த்துட்டு இருந்த என்டா வாங்கிட்டு வாற ஐஸ்க்ரீம் உடன உருகிடும்" சிரித்தான். "இந்தக் குளிருக்கும் காத்துக்கும் உருகாது, நீ போய் வாங்கிக் கொண்டு வா, நான் அங்கால பீச்ல இருக்கிறன்." அவள் வெகுளித்தனமான பதிலைக் கேட்டு சிரித்துக்கொண்டே கடைக்குள் போனான். எந்த யோசனையும் இன்றி அவனைத் தட்டி கடைக்கு அனுப்பிவிட்டு அகன்ற கடற்கரைச் சாலையை கடக்க துவங்கினாள். அவள் நினைவில் இருந்தவைகள் எல்லாம் ஒன்றுதான். ...

நீ பார்க்கும் பார்வைகள் 2

Image
அவனுடைய தேவதையின் மடியில் தஞ்சம் புகுந்திருந்தான். அவளும் அவளுடையவனின் தலைமுடியை வலது கையால் அழைந்தபடி இருந்தாள். அவள் இடது கை அவன் இருகரங்கள் இடையே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. அவன் அந்தக் கரத்தை குழந்தை விளையாட்டுப் பொம்மையைப் பார்ப்பது போலப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவளது கைதான் எவ்வளவு மென்மை. அவள் மௌனித்து அவன் செய்கைகளை ரசித்துக் கொண்டு இருந்தாள். அரவிந்தின் முகம் ஒருபோதும் பாவம் காட்டாது. ஆனால் அவன் கண்கள் அதிகம் காட்டும். பலராலும் அதை உணர்ந்து கொள்ள இயலாது. ஆனால் தான்யா அவ்வாறு இல்லை. அவன் முகத்தசை அசைவுக்குக்கூட அர்த்தம் கூறுவாள். அவன் கண் சிரித்தால் அவள் மனம் ஆகாசத்தில் சிறகு விரித்துப் பறக்கும். அவன் கண்கள் சிறிது சோபை இழந்தாலும் கூட அவள் ஆன்மா எங்கோ ஆழங்களில் பாதாளத்தில் இருந்து கதறி அழும். இன்றைக்கு அவள் பார்த்துக் கொண்டிருந்த பார்வைக்கு அவன் கண்கள் ஜொலித்துக் கொண்டு இருந்தது. அவன் கைகள் இரண்டும் அவள் கையைப் பற்றிக்கொண்டு இருந்தது. அந்தப் பிடிமானம் அவன் உள்ளத்தின் ஆழமான உணர்வுகளை அவளுள் கடத்திக்கொண்டு இருந்தது. அவன் வாய் ஏதோ ஒரு பாடலை மெல்ல உச்சரித்துக் கொண்...